மெரினாவில் நெகிழ்ச்சி: 39 ஆட்டிசம் குழந்தைகள் 2 கி.மீ தூரம் கடல் நீச்சல் செய்து சாதனை!

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை படைத்தனர்.

ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் கடல் நீச்சல் நிகழ்வு
சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறனையும், தன்னம்பிக்கையும், மன உறுதியையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் தனியார் அறக்கட்டளை சார்பில் நேற்று கடல் நீச்சல் நிகழ்வு நடைபெற்றது.

39 குழந்தைகள் 2 கி.மீ. நீந்தி சாதனை
இந்த கடல் நீச்சல் நிகழ்வில் ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை படைத்தனர்.

கடல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
மெரினா கலங்கரை விளக்கத்தில் இருந்து கண்ணகி சிலை வரை குழந்தைகள் நீந்தி சென்றனர். அப்போது, ஆட்டிசம் குறித்தும், கடல்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.