தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் புதிய தலைவராக லயோலா மணி நியமனம்!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான பணி நியமன ஆணையை முதல்வர் சி. ஜோசப் விஜய் லயோலா மணியிடம் இன்று(ஜூலை 13) வழங்கினார். இந்த நிகழ்வின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனிருந்தார்.

முன்னதாக, திமுக ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி இருந்து வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்தப் பொறுப்பு லயோலா மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகம் செய்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள லயோலா மணி, 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிப்பார்.

Leave A Reply

Your email address will not be published.