ஊடகவியலாளர் நடராசாவின் தாயார் காலமானார்!

‘ராவய’ வெளியீடான ‘ஆதவன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவரும், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பிராசா நடராசாவின் தாயார் திருமதி விசாலாட்சி தம்பிராசா (வயது 84) நேற்று காலமானார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை – கறுவாக்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்னாரின் பூதவுடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றதைத் தொடர்ந்து, கறுவாக்கேணி பொதுமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மறைவு குறித்து ஊடகவியலாளர் சங்கங்களும், சக ஊடகவியலாளர்களும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.