ரஷியாவின் ஏவுகணைத் தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி!

டெல்லி,

உக்ரைன், ரஷியா இடையேயான போர் 4 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

4 இந்தியர்கள் பலி
இதனிடையே, உக்ரைனின் ஒடேசா நகர துறைமுகத்தில் இருந்து கடந்த 19ம் தேதி கினியா பிசாவ் நாட்டு கொடியுடன் புறப்பட்ட சரக்கு கப்பல் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த 4 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு இந்திய மாலுமி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்திய அரசு சம்மன்
இந்நிலையில், சரக்கு கப்பல் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக ரஷிய தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.