இலங்கையில் தீவிரமடையும் டெங்கு தாக்கம் – பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு.

இலங்கையில் தற்போது பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் இந்த வாரம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், 2026 ஆம் ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இதுவரை 77 ஆயிரத்து 28 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை தற்போதைய சுகாதார நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைகின்றது.

டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07 சதவீதம் என்ற ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் காணப்பட்ட போதிலும், நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வைத்தியசாலைகளில் கடுமையான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மாகாண ரீதியில், மேல் மாகாணம் தொடர்ந்து டெங்கு பரவலின் பிரதான மையப் பகுதியாகத் திகழ்கின்றது. இங்கு மாத்திரம் 40 ஆயிரத்து 573 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதிகூடிய எண்ணிக்கையாகக் கம்பஹாவில் 16 ஆயிரத்து 164 பேரும், கொழும்பில் 15 ஆயிரத்து 341 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.