செம்மணியில் நீதி கோரி உறவுகள் நாளை போராட்டம் – ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் முன் சர்வதேச விசாரணைக்கு வேண்டுகோள்.

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினரிடம் சர்வதேச விசாரணைக்கு வழிவகை செய்யக் கோரி, நாளை புதன்கிழமை காலை செம்மணியில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 454 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாளுக்கு நாள் இதனுடன் தொடர்புடைய உண்மைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

எனவே, இந்தப் புதைகுழியைப் பார்வையிட நாளை வருகை தரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் ஊடாக சர்வதேச விசாரணைக்கு வழியேற்படுத்த வேண்டும் எனக் கோரியே, நாளை காலை 8 மணிக்குச் செம்மணியில் இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.