சூரத் உணவகத்தில் அதிர்ச்சி: கோபி மஞ்சூரியன் தட்டில் கிடந்த இறந்த எலி!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய கோபி மஞ்சூரியன் தட்டில் இறந்த எலி கிடந்த சம்பவம் சமீபத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ இணையத்தில் வைரலாகி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் உணவகத்திற்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில், வாடிக்கையாளர் வாங்கிய மஞ்சூரியன் தட்டில் எலி இருந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட உணவகத்தில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது, உரிய உரிமம் இன்றி உணவகம் இயங்கியமை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய மதிப்பில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.