தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய காவிரி நீர் எவ்வளவு? கர்நாடகா தந்த நீர் எவ்வளவு? – மக்களவையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி,

நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அவ்வாறு, நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில், தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகா வழங்கிய நீரின் அளவு குறித்து கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், “கர்நாடகா, காவிரியில் ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்திற்கு 31.24 டி.எம்.சி. நீரும் தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், ஜூன் மாதத்திற்கு 2.915 டி.எம்.சி. நீரும், ஜூலைக்கு 0.459 டி.எம்.சி. நீர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.