போதைப்பொருள்களுடன் நீர்வேலியில் மூவர் கைது!

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் போதைப்பொருள்களுடன் 3 சந்தேகநபர்களை யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 600 போதைமாத்திரைகள் மற்றும் 5.650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுடன் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.