கேரளாவை உலுக்கும் கனமழை: 15 பேர் உயிரிழப்பு!

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த ஜுன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

குறிப்பாக, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

15 பேர் பலி
கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவு போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில முதல்-மந்திரி வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.