இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு!

ஒரு நாள் பயணமாக இன்று கொழும்பை வந்தடைந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மற்றும் முன்னுரிமை பெற்ற துறைகளில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்தாலோசித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.