வடக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கக் கூடாது என்ற மனுக்களை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

வடக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கக் கூடாது என்ற மனுக்களை தள்ளுபடி செய்தது யாழ். மேல் நீதிமன்றம்!

வடக்கில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கக் கூடாது என்ற மனுக்களை விசாரணை செய்ய மாகாண  மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்ற அடிப்படையில் குறித்த மனுக்கள் யாழ். மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது

நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வைத் தடைசெய்யக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான குறித்த மனுக்களை மாகாண  நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியுமா என எதிர்த்தரப்பு வாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள், சட்டதரணிகள் மன்றில்  எழுப்பிய கேள்வியின் அடிப்படையில் அது தொடர்பான நீண்ட நேர விவாதம் இடம்பெற்றது. இதனை ஆராய்ந்த நீதிபதி மேல் நீதிமன்றத்தில் குறித்த மனுக்கள் மீது விசாரணை நடத்த முடியாது எனத் தெரிவித்து அதனைத் தள்ளுபடி செய்தன.

மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன், விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.