உ.பி.யில் பேரதிர்ச்சி: 8 ஆண்டாகப் பெட்டியில் பூட்டி வைத்த 12 லட்சம் ரூபாயைக் கடித்துக் குதறிய எலிகள்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில், நகை வாங்குவதற்காக குடும்பப் பெண் ஒருவர் 8 ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை எலிகள் கடித்துச் சிதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தங்க நகை வாங்க வேண்டும் என்ற நோக்கில் தனது கணவருக்குத் தெரியாமல் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு பெட்டியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.

சேமிப்புத் தொகை 12 இலட்சம் ரூபாயை எட்டிய நிலையில், நகை வாங்குவதற்காக நேற்று அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.

அப்போது, பெட்டிக்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எலிகளால் கடித்து சிதைந்திருந்ததைக் கண்டு அவர் பேரதிர்ச்சியடைந்தார்.

Leave A Reply

Your email address will not be published.