கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய அரசு திட்டம்! – உலக வங்கி பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்.
உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் கெவோர்ர்க் சர்க்சியன் (றூeஸலிrஆ றீழிrஆவிதீழிஐ) தலைமையிலான தூதுக்குழுவினருக்கும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் இடையிலான சிறப்புக் கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதனை ஒரு சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வது குறித்து இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டன.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், விவசாயம், துறைமுகங்கள், விநியோக சேவைகள் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கும் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.

மேலும், கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக மாற்றுவதுடன், இயற்கை அழகை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறையைப் பிரபல்யப்படுத்துதல் மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறையை முன்னேற்றுவதற்கு வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கி முகாமைத்துவப் பிரிவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஸ்டீபன் முசிங் (றீமிeஸ்ரீஜுழிஐ னிற்விவிஷ்ஐஆ), உலக வங்கி தூதுக்குழுவின் பிரதான செயற்பாட்டு அதிகாரி அசேல திசாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
