கர்நாடகாவில் அதிர்ச்சி: ஏரியில் இருந்து 4 பெண்கள் உட்பட 6 பேரின் உடல்கள் மீட்பு!
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பட்னல் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார், ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள், 2 சிறுவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த 6 பேர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? ஏரியில் குளிக்க சென்று மூழ்கி உயிரிழந்தனரா? தற்கொலை செய்தனரா? கொலை செய்யப்பட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
