டிரக்டர் மோதி 7 வயது சிறுமி பரிதாபப் பலி! – மன்னாரில் துயரம்

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை வீதி ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில், டிரக்டர் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமியே இந்தச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய 32 வயதுடைய டிரக்டரின் சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.