கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி மரணம்! – தலைமன்னாரில் கொடூரம்.
தலைமன்னார் – ஸ்டேஷன் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கணவனின் கொடூர கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மனைவி, உடனடியாக மீட்கப்பட்டு தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோட முயன்ற உயிரிழந்த பெண்ணின் கணவர், தலைமன்னார் ஸ்டேஷன் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
