புங்குடுதீவு கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

யாழ். புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் நேற்று ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுக் காலை கடற்றொழிலுக்காகச் சென்றவர்கள், அந்தச் சடலத்தைக் கண்டு, உடனடியாக ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

சடலமானது அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், கரையொதுங்கிய மேற்படி நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.