கண்டி தலதா பெரஹரவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த நிலையில், ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் இணைந்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் பெரஹரவைக் கண்டுகளிப்பதில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்ததுவ வைத்தியர் ஹர்ஷ சுரங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொந்தா, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சிரேஷ்ட பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.