பெற்றோல் விலைகள் குறைப்பு!

மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய விலைத் திருத்தங்களின்படி, 92 ஒக்டேன் பெற்றோல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மற்றைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன்படி, ஒட்டோ டீசல் 382 ரூபா, சுப்பர் டீசல் 478 ரூபா மற்றும் மண்ணெண்ணெய் 285 ரூபா ஆகிய விலைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.