ஜார்க்கண்டில் திறந்தவெளிச் சிறை திட்டம்: பகலில் வேலை பார்க்க கைதிகளுக்கு அனுமதி!
ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைதிகள் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தங்கள் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்துக்காக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
கைதியின் குடும்பம்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் அவர்களின் வீட்டு சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரம் கருத்தில் கொண்டு தகுதியான கைதிகள் பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை பார்த்துவிட்டு, மாலையில் மீண்டும் சிறைக்குத் திரும்பும் புதிய திறந்தவெளிச் சிறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
நான்கு சிறைகள்
இந்த திட்டத்தின்படி கைதிகள் காலை 6 மணி அல்லது 7 மணி அளவில் சிறையிலிருந்து வெளியே சென்று வேலை பார்க்கலாம். வெளியே சென்று வேலை செய்யும் கைதிகள் மாலை 6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டுமெனவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக ஜார்க்கண்டில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறை, ஜெய் பிரகாஷ் நாராயண் மத்திய சிறை, ஹசாரிபாக் காசிடிஹ் மத்திய சிறை, தும்கா மத்திய சிறை ஆகிய நான்கு மத்திய சிறைகளில் தொடங்கப்படுகிறது.
சில கைதிகள்
இது தொடர்பாக பேசிய அதிகாரிகள், “சிறைக்குள் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தைக் கொண்ட கைதிகள் மட்டுமே இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் வெளியே செல்லும் கைதிகள் தொடர்ந்து சிறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவார்கள்” என்றனர்.
இதற்கான சிறந்த தலைப்புகள்
