பிரதமர் ஹரிணி பூட்டான் பயணம் – உலக உணவு உச்சிமாநாட்டில் சிறப்புரை.

பூட்டானுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று காலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இந்த விஜயத்தின் போது, பூட்டானில் நடைபெறவுள்ள ‘உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள்’ உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதமர், அதில் சிறப்புரையாற்றவுள்ளார்.

அத்துடன், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான பல உத்தியோகபூர்வ சந்திப்புகளிலும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொள்ளவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.