தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி சார்பில் மதுராந்தகம்(தனி), தாராபுரம்(தனி) சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பில் தமிழக வெற்றிகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைவருக்கும் வணக்கம்.

வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.

1. 35-மதுராந்தகம் (தனி) – திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.LA.. கழகத் துணைப் பொதுச் செயலாளர்

2. 101-தாராபுரம் (தனி) திருமதி.சத்தியபாமா. Ex.MLA.. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.