எல்லை தாண்டிய அரசியல்: கேரளாவில் முதல் கிளையைத் தொடங்கியது தமிழக வெற்றிக் கழகம்!

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் கேரள மாநில அரசியல் களத்தில், தவெக காலடி எடுத்து வைத்திருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ரிப்பன் வெட்டி திறப்பு
பாலக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அலுவலகத்தை, உள்ளூர் தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொண்டர்கள் உற்சாகம்
கட்சி தலைவர் விஜய் மீதான எல்லையற்ற அன்பின் காரணமாக, கேரள மாநில தவெக ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்த அலுவலகத்தை தன்னிச்சையாக ஏற்பாடு செய்து திறந்துள்ளனர். அலுவலக திறப்பு விழாவை தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் தவெகவினர் பல்வேறு சமூக நல உதவிகளையும் தொண்டு பணிகளையும் உடனடியாக துவங்கியுள்ளனர்.

கேரளாவில் முதன்முறையாக தவெகவின் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது, அம்மாநில அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.