ரூ.100 கோடி பணமோசடி புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப் பதிவு; 6 இடங்களில் அதிரடி சோதனை!
100 கோடி மோசடி செய்ததாக தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பாடசாலை நிர்வாகிகளிடமிருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமாக பணம் பெற்று ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் முறைப்பாடு அளித்துள்ளது.
100 கோடி மோசடி
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாட்டின் முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருச்சி தென்னூரில் உள்ள அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், சென்னை, திருச்சியில் அவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அன்பில் மகேஸ் வீட்டுக்கு வெளியே திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் வரத் தொடங்கியதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
