யூடியூபர் வைஷ்ணவி மரணம்: ஜாமீனில் வந்த கணவனை கொலை செய்த அண்ணன் – தெலங்கானாவில் பரபரப்பு!
யூடியூபரான தங்கையின் மரணத்திற்கு காரணமான கணவனை , யுவதியின் அண்ணன் கொலை செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த யூடியூபர் வைஷ்ணவி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அவரது கணவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு வந்ததாகவும், குடும்பத்தில் எப்போதும் பிரச்சினைகள் இருந்து வந்ததாலேயே வைஷ்ணவி உயிரிழந்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து வைஷ்ணவியின் மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹரி பாபுவை போலீசார் கைது செய்தனர். தங்கையின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரர் சந்தோஷ் மிகுந்த மனவேதனையில் இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரி பாபு ஜாமீனில் வெளியே வந்தார். அவருக்கு உரிய தண்டனை கிடைக்காது என்பதை உணர்ந்த சந்தோஷ், ஹரி பாபுவை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
கொலை செய்த பின்னர் நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்ற சந்தோஷ் சரணடைந்ததாக கூறப்படுகின்றது.
