புத்தகம் வாசிப்போம்.வேலைத்திட்டத்தின் நூல்கள் வழங்கிவைப்பு.

புத்தகம் வாசிப்போம் : வேலைத்திட்டத்தின் நூல்கள் வழங்கிவைப்பு.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒரு வருட செயற்திட்டத்தின் கீழ் ஒக்டோபர் மாதத்திற்கான “புத்தகம் வாசிப்போம்” வேலைத்திட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப அலுவலக பொது நூலகத்திற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தால் ஒரு தொகுதி நூல்கள் இன்று (23) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒட்டிசுட்டான் பிரதேச செயலக கலாச்சார மற்றும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் ரூபா 3200.00 பெறுமதியான பாடசாலை மாணவர்களுக்கான 06பயிற்சிப் புத்தகங்கள் குறித்த நூலகப் பொறுப்பாசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.