நல்லூர் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் வெண்கலச் சிலை பொலிஸாரால் இன்று அகற்றம் – பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம்.

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் வெண்கலச் சிலையை இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்ப நாளான கடந்த 15ஆம் திகதி இந்த வெண்கலச் சிலை நினைவாலயப் பகுதியில் வைக்கப்பட்டு, தொடர்ந்து 12 நாள்கள் விசேட அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. நேற்று சனிக்கிழமை இறுதி நாள் நிகழ்வுகளும் உணர்வுபூர்வமாக நிறைவடைந்தன.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நினைவாலயத்துக்கு யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20 இற்கும் மேற்பட்ட பொலிஸார் இரண்டு பொலிஸ் வாகனங்களில் வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலையைப் பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர்.

வெண்கலச் சிலையைப் பொலிஸார் பெயர்த்து எடுத்துச் செல்லும் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த வெண்கலச் சிலைப் பொலிஸார் அடாத்தாக அகற்றிச் சென்றமைக்குத் தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Screenshot

Leave A Reply

Your email address will not be published.