பொரளைப் பொலிஸ் நிலையக் கான்ஸ்டபிள் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு!

கொடகம – பாதுக்கை வீதியின் லியன்வல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று கொடகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த சுவரில் மோதி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி உடனடியாக மீட்கப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த, ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.