வடக்கில் இன்று ஆறு மணிநேரம் மின்சாரம் தடை – நாளையும் தொடரும்; மக்கள் பெரும் அவதி.

வவுனியா – மன்னார் உயர் அழுத்த மின்வடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர திருத்தப் பணிகள் காரணமாக, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று வெள்ளிக்கிழமை 6 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மின்தடை அமுலில் இருக்கும்.

இதேவேளை, நாளை சனிக்கிழமையும் ஆறரை மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாளை நண்பகல் 12 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த மின்தடை தொடரும்.

இந்த நீண்ட நேர மின்தடையால் வடக்கு மாகாண மக்கள் தமது நாளாந்த செயற்பாடுகளில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.