சீட்பெல்ட் அணியாத 3 ஆயிரம் பேர் மீது சட்ட நடவடிக்கை.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போது புதிய ஆசனப்பட்டிப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட 3 ஆயிரம் பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிகள் மற்றும் பயணிகளில் பெரும்பாலானோர் புதிய சட்டத்துக்கு அமைவாகச் செயற்பட்ட போதிலும், சிலர் தொடர்ந்தும் விதிமுறைகளை மீறி வருகின்றனர் என்று போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கடந்த செப்டெம்பர் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.