ஞானசாரர் மீதான வழக்கு ஒத்திவைப்பு.

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரர், நிலுவையிலுள்ள பிடியாணை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளால் சாதாரண உடையில் மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.