விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் ஷிராந்தி ராஜபக்ஷ பாதுகாப்பான தனிப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.

அரச வங்கியொன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.