அமைதிக்கான நோபல் பரிசை வென்று வரலாறு படைத்தார் தமிழ் பெண்மணி நவநீதம் பிள்ளை!
2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தமிழ் பெண்ணான நவநீதம் பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற தமிழ் பெண்மணி
2026 ஆம் ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தமிழ் வம்சாவளி நீதிபதியான நவநீதம் பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமைதி மற்றும் சர்வதேசச் சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த தமிழரான நவநீதம் பிள்ளை, 1967 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார்.
1973 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.
நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் உயர் நீதிமன்றத்திலும், ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையராகவும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பிரதேசம் குறித்த ஐ.நாவின் சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.
தற்போது ,மியான்மர் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான வழக்கில் நவி பிள்ளை சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார்.
BREAKING NEWS
The Norwegian Nobel Committee has decided to award the 2026 #NobelPeacePrize to Navanethem “Navi” Pillay for her efforts to promote peace and international law.#NobelPrize https://t.co/97vurspw6z
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2026
