வீதி விபத்தில் ஓட்டோ சாரதி பலி! – வான் சாரதி கைது.

கொழும்பு, ஹோமாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பனை – மொரகஹஹேன வீதியின் மாயா பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்குத் திரும்ப முற்பட்ட ஓட்டோ, பிரதான வீதியில் வேகமாகப் பயணித்த வான் மீது மோதி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டோ சாரதி உடனடியாக ஹோமாகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவராவார்.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.