கேரள சட்டப்பேரவையில் வரலாற்றுத் தீர்மானம்: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரிக்கை!

திருவனந்தபுரம்,

கேரள சட்டப்பேரவையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க கோரி, கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதல்-மந்திரி வி.டி. சதீசன் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஒருமனதாக ஆதரவு அளித்தனர்.

வழக்கமாக எப்போதுமே ஆளும் தரப்பு கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கவே செய்யும். ரொம்பவே அரிதான விவகாரங்களில் மட்டுமே எதிர்க்கட்சிகள் ஆதரவாக நிற்கும். அதன்படி இந்த தீர்மானத்துக்கு அங்குள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஆதரவு அளித்துள்ளது. டெல்லியில் நடந்த எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் சதீசன், பினராயி விஜயன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தீர்மானத்தை முன்மொழிந்து முதல்-மந்திரி வி.டி.சதீசன் கூறியதாவது:-

* வாக்களிக்கும் உரிமையே நமது ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.

* தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவை மறுசீரமைக்க வேண்டும்.

* தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி இடம்பெற வேண்டும்.

* தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குழுவை சீரமைத்து தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

* நமது குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையை சீர்குலைக்க எந்தவொரு அமைப்பையும் அனுமதிக்க முடியாது.

* தலைமை தேர்தல் ஆணையரின் நடுநிலை குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

* சுதந்திரமான ,நியாயமான தேர்தல்களுக்காக கேரளம் உறுதியுடன் நிற்கும்.

* எஸ்.ஐ.ஆர். மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கம் செய்ய கோரி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் கேரளத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைமைத்தேர்தல் ஆணையருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வரலாறு படைத்தது கேரளம்.

Leave A Reply

Your email address will not be published.