பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறை விழிப்புணர்வு செயற்பாடு.

பெண்களுக்கு எதிரான பால்நிலை வன்முறையினை இல்லாதொழிக்க இன்றிலிருந்து தொடர்ச்சியாக 16 நாட்கள் விழிப்புணர்வு செயற்பாடு யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் மேற்கொள்ளப்படுகிறது.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினரின் பங்குபற்றுதலோடு விழிப்புணர்வு செயற்திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது .

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) தனியார் தொண்டு நிறுவனத்தினரால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2020ஆம் ஆண்டு இந்த கொவிட் 19 நோயின் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு பெண்கள் உள்ளாகியுள்ள நிலையில் இந்த வருடத்திற்கான தொனி பொருளாக “கொவிட் 19 பாதிப்பின் ஊடாக வன்முறைக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வன்முறையிலிருந்து வெளியே கொண்டுவருதல்” எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தொனிப்பொருள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரை பதினாறு நாட்கள் இம் முறை தொடர்ச்சியாக டிஜிட்டல் மற்றும் ஊடகங்கள் ஊடாக இந்த செயற்பாடுகளை செயற்படுத்த உள்ளார்கள்.

அதன் அடிப்படையில் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபரினால் இந்த திட்டமானது ஆரம்பித்து வைக் ப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும்16 நாட்கள் அரச உத்தியோகத்தர்கள், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்கள் அவர்களுடைய பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.