கோமாரியில் விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைப்பு.

பொத்துவில் கோமாரியில் விவசாய விரிவாக்கல் நிலையம் திறந்து வைப்பு

அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி பிரதேசத்தில் புதிதாக விவசாய விரிவாக்கல் நிலையம் செவ்வாய்க்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு கோமாரி விவசாய போதனாசிரியர் பி.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் டி.எம்.எஸ்.வீ.டிஸாநாயக்க பிரதம அதிதியாக்க கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார்.

இவ் விவசாய விரிவாக்கல் நிலையமானது கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பீ.எஸ்.டி.ஜீ திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடா அம்பாறை மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் காரியாலயத்தின் கீழ் இவ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நிலைய வளாகத்தில் அதிதிகளால் மரக் கன்றுகள் நடப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டு பூஜைகள் இடம்பெற்று இருந்தன இதனைத் தொடர்ந்து விவசாய திணைக்கள அதிகாரிகள் புதிய விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஊடாக கோமாரி பிரதேச விவசாயிகளுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய காத்திரமான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் டி.எம்.எல்.வீ.டிஸாநாயக்க லாகுகல பிரதேச உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.ஜ.எம்.இஸ்மாலெப்பை மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளான எஸ்.பரமேஸ்வன் பாடவிதான உத்தியோகத்தர்கள் விவசாய போதனாசிரியர்கள் தொழிநுட்ப உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.