மாமனாரைக் கொன்ற மருமகன் தப்பியோட்டம் – பொலிஸார் தீவிர தேடுதல்.

கம்பஹா, நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கொல்லவத்தை பகுதியில், 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வயோதிபருக்கும் அவரது மகளின் கணவரான மருமகனுக்கும் இடையே நேற்று சனிக்கிழமை மாலையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த வயோதிபர் உடனடியாக வத்துபிட்டிவல ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நிட்டம்புவை, தங்கொல்லவத்தை பகுதியைச் சேர்ந்தவராவார்.

சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியுள்ள 26 வயதுடைய சந்தேகநபரை (மருமகன்) கைது செய்வதற்காக நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.