ஊழல்வாதிகள் தப்பவே முடியாது!
குற்றம் செய்தவர் எவராயினும் தண்டனை
உறுதி என்று நீதி அமைச்சர் திட்டவட்டம்
“இது குடும்ப ஆட்சி அல்ல, சட்டத்தின் ஆட்சி. ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.”
இவ்வாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய ஆட்சியில் நீதித்துறை முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுகின்றது.
ஊழல், மோசடிக்காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளால் அவர்களின் சகாக்கள் தற்போது ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளனர்.
யார் குற்றம் செய்திருந்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
இவ்வாறான சட்ட நடவடிக்கைகளில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது.” – என்றார்.
