வீட்டில் தனிமையில் இருந்த இளம் யுவதி சடலமாக மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை.

அனுராதபுரம், நொச்சியாகம பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலையில் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த பெற்றோர் மதியம் வீடு திரும்பிய வேளையில், வீட்டின் அறையொன்றில் மேற்படி யுவதி உயிரிழந்த நிலையில் காணப்பட்டமையையடுத்து அடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் யுவதியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

யுவதி சடலமாகக் காணப்பட்ட அறையிலிருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டமையால், அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பெற்றோருடன் ஏற்பட்ட குடும்ப வாய்த்தர்க்கம் காரணமாக, கடந்த சில நாள்களாக மேற்படி யுவதி பெற்றோருடன் பேசாமல் இருந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.