கோர விபத்தில் 7 வயது சிறுவன் பரிதாப மரணம்!

வீதி விபத்தில் ஏழு வயது சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளமையுடன், அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

பிபிலைப் பகுதியைச் சேர்ந்த தந்தை தன் மகனுடன் ஓட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த போது, எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் ஓட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஓட்டோவைச் செலுத்திச் சென்ற சிறுவனின் 38 வயதுடைய தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளமைடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.