பெருமகிழ்ச்சி வெளியிட்டார் சஜித் – அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உழைத்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார்.

இலங்கையின் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொறியியலாளர் சிவராசா அனோஜனுக்குச் சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டிருந்த மரணதண்டனையை இரத்துச் செய்ய அந்த நாட்டு அரசு எடுத்த தீர்மானம் குறித்துத் தனது பெரு மகிழ்ச்சியையும் நன்றியையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதற்காக உழைத்த அனைவருக்கும் தனது மரியாதையையும் நன்றியையும் அவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“கல்முனையைச் சேர்ந்த பொறியியலாளர் அனோஜனின் மரணதண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள செய்தி கேட்டு உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஓர் உயிரைக் காப்பாற்றும் இந்த முயற்சியில் எங்களாலும் முடிந்தளவு பங்களிப்பை வழங்க முடிந்தது எனது வாழ்க்கையில் கிடைத்த பாக்கியமாகவும் கௌரவமாகவும் கருதுகின்றேன்.

அனோஜனின் வாழ்வுரிமைக்காக அர்ப்பணிப்புடன் போராடிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் பைசல் முஸ்தபா, உபுல் குமரப்பெரும உள்ளிட்ட சட்டக் குழுவினருக்கும், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஓர் உயிரைக் காப்பாற்றும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தீர்மானத்தை வழங்கிய சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்துக்கும், சவூதி மன்னர் மற்றும் சவூதி அரசுக்கும் மீண்டும் மீண்டும் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.