ஷானி அபேசகரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று

மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை நேற்று இரவு மஹர சிறையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இதுவரை சிறைச்சாலைகளிலிருந்து அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஷானி அபேசேகர தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹர சிறைச்சாலையின் குறித்த வார்டில் இருந்து இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்படவில்லை எனவும், அவருக்கு ஏவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான மேலும் 19 பொலிஸார் மற்றும் 17 அதிரடிப் படை வீரர்கள் (STF) புதிதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் கொத்தணி மொத்த எண்ணிக்கை 1,095 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.