“ரொம்ப டிப்ரஷனா இருக்கு சார், லீவு விடுங்க”: மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் கொடுத்த அல்டிமேட் பதில்!

மழை காரணமாக மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் பலர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் கோரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் பலர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோரிக்கை விடுத்தனர்.

மாணவர் ஒருவர், ரொம்ப டிப்ரஷனா இருக்கு சார், ப்ளீஸ் ஒரு நாள் லீவு என பதிவிட்டிருந்தார்.

இதனை பகிர்ந்த ஆட்சியர், மாணவர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தார்.

கனமழை பெய்தால் மாணவர்கள் கேட்காமலேயே விடுமுறை அறிவிக்கப்படும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மழை வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன், இப்போதைக்கு புத்தகத்தை பார்த்து படியுங்கள் என நகைச்சுவையாக அறிவுரை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.