நாடாளுமன்ற நுழைவாயிலில் இன்று மாபெரும் போராட்டம்! – மக்கள் போராட்ட முன்னணி அழைப்பு.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.

எந்தவித திருத்தங்களும் இன்றி, இவ்விரு சட்டமூலங்களும் முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும் என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

அரசால் கொண்டுவரப்படவுள்ள இந்தச் சட்டமூலங்கள் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகவும், அடக்குமுறைகளை ஏவிவிடுவதாகவும் என்று சுட்டிக்காட்டிய அவர், அனைத்துத் தரப்பினரையும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணையுமாறும் அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.