யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பியை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய திருமாவளவன்! – வடக்கு, கிழக்கின் தற்போதைய அரசியல் நிலைமை, தமிழ் மக்களின் நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த தொல்.திருமாவளவன், நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அவரது யாழ். இல்லத்தில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஈழத் தமிழ் மக்களின் தற்கால வாழ்க்கை நிலை, அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தொல்.திருமாவளவன் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.
