உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு முன்பாகவும் உத்தியோகத்தர்கள் போராட்டம்.

2027ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது கோரிக்கைகளை முன்வைத்தும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் ஒரு கட்டமாக, கொழும்பிலுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு (வருமான வரித் திணைக்களம்) முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு முன்பாக இன்று நண்பகல் மதிய உணவு இடைவேளையின்போது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2027ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது கோரிக்கைகளை வலியுறுத்தியும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், சாரதி சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.