சுங்கச்சாவடிகளில் நம்பர் பிளேட்டை மறைத்தால் 5 மடங்கு அபராதம்: மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை!

புதுடெல்லி,

நாட்டின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் தடையற்ற சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கவோ, வேகம் குறைக்கவோ போன்ற எத்தகைய இடையூறும் இன்றி செல்லும்போதே, எலக்ட்ரானிக் முறையில் சுங்கக்கட்டணம் தானாகவே வசூலாகிறது. இதில் வாகனங்களின் பதிவு எண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

எனவே இந்த சுங்கச்சாவடிகளை கடக்கும்போது வேண்டுமென்றே பதிவு எண்களை மறைத்தல், திருத்துதல் அல்லது ஒளித்து வைத்தல், அல்லது பாஸ்டாக் ஒட்டாமல் இருத்தல் போன்ற செயலில் ஈடுபடும் பயனாளர்களுக்கு, பயனாளர் கட்டணத்தின் 5 மடங்கு பணம் அபராதமாக வசூலிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயனாளர் கட்டணத்துடன் கூடுதலாக இந்த அபராத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.