நாவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் : தொலைபேசி வேட்பாளர்களை எச்சரித்த சஜித்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ , பேராயர் மல்க்கம் ரஞ்சித் அவர்கள் குறித்து பேசிய கருத்து மற்றும் எழுந்த சமூக உரையாடல் குறித்து விவாதிக்க நேற்று முன் தினம் இரவு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களின் அவசரக் கூட்டத்தை கூட்டிய போது வேட்பாளர்கள் பேசும் போது தங்களது நாவை அடக்கி நிதானமாக பேசுமாறு சஜித் பிரேமதாச எச்சரித்தார்.

தேர்தல் மேடையில் கருத்து தெரிவிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக மதத் தலைவர்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது பொறுப்பற்ற அறிக்கைகள் தேர்தல் பிரச்சாரத்தை மோசமாக பாதிக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சில நபர்கள் மேடைகளில் பேசிய பொறுப்பற்ற பேச்சுகள் மற்றும் அறிக்கைகள் அவரது வெற்றியை பெரிதும் பாதித்தாக தெரிவத்தார்.

Comments are closed.